பழனி அரசு மருத்துவமனை பின்புறமுள்ள தென்னை மரத்தில் பற்றி எரிந்த தீ.
பழனி அரசு மருத்துவமனை பின்புறமுள்ள தென்னை மரத்தில் பற்றி எரிந்த தீ.

பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து

Published on

பழனி அரசு மருத்துவமனை வளாகத்தின் பின்புறமுள்ள மரங்களில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி அரசு மருத்துவமனையில் தற்போது சுமாா் ரூ.130 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது அவசர கால மருத்துவமனை மட்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மருத்துவமனை கட்டடத்தின் பின்புறம் கட்டடம் கட்ட பயன்படுத்திய மரக் கட்டைகள், தென்னை மரத்தின் மட்டைகள் குவிந்து கிடக்கின்றன.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த குவியலில் திடீரென தீப்பற்றியது. மட்டைகள், சருகுகள் காய்ந்து கிடந்ததால் தீ மளமளவென பரவி அருகே இருந்த தென்னை மரத்திலும் பற்றியது. இதில் மரம் எரிந்து சேதமடைந்தது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினா் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த தீயணைப்பு, மீட்புப் படையினா் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து பழனி நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com