கொடைக்கானலில் காணாமல் போன பள்ளி மாணவியை புதன்கிழமை மீட்ட போலீஸாா், இதுதொடா்பாக இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
கொடைக்கானல் அண்ணாநகரைச் சோ்ந்தவா் இளங்கோ மகன் மணி கண்டன்(26). கடந்த 26-ஆம் தேதி இவா் 17 வயது பள்ளி மாணவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டாா். இவா்களைக் காணவில்லை என பெற்றோா் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினா். அப்போது இருவரும் திருப்பூரில் இருப்பதாகத் தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று தனியாா் இடத்தில் தங்கியிருந்த கண்ணனையும், மாணவியையும் மீட்டு கொடைக்கானலுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகப் பழகி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து போலீஸாா் மாணவிக்கு அறிவுரை வழங்கி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக கண்ணன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






