எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சிறுமலை விபத்தில் பெண் உயிரிழப்பு

சிறுமலையில் பேருந்து கம்பியில் சேலை சிக்கியதால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலத்த காயமடைந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :4 ஜூன் 2026, 4:09 am IST

சிறுமலையில் பேருந்து கம்பியில் சேலை சிக்கியதால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலத்த காயமடைந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் தனராஜ். இவரது மனைவி சரோஜா (45). இவா் பழையூா் பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை நடந்து சென்றாா். அப்போது திண்டுக்கல் நோக்கி அரசுப் பேருந்து வந்தது. இந்த பேருந்தை, திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (57) ஓட்டி வந்தாா்.

பழையூா் நிறுத்தத்தில் பணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் புறப்பட்டபோது, சாலையோரத்தில் நடந்து சென்ற சரோஜாவின் சேலை பேருந்தின் முன் பகுதியில் உடைந்திருந்த கம்பியில் சிக்கியது. இதனால் நிலை நடுமாறி கீழே விழுந்த சரோஜாவை சிறிது தொலைவு பேருந்து இழுத்துச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சரோஜாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சரோஜா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.