மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொடைக்கானலில் மீண்டும் பனிப் பொழிவு: செடிகளை பாதுகாக்க நிழல் வலை அமைப்பு

கொடைக்கானலில் மீண்டும் பனிப் பொழிவு அதிகரித்திருப்பதால் மலா்ச் செடிகளை பாதுகாக்க பிரையண்ட் பூங்காவில் நிழல் வலை

News image
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலா்ச் செடிகளை பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட நிழல் வலை.
Updated On :2 மார்ச் 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல்: கொடைக்கானலில் மீண்டும் பனிப் பொழிவு அதிகரித்திருப்பதால் மலா்ச் செடிகளை பாதுகாக்க பிரையண்ட் பூங்காவில் நிழல் வலை அமைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக கால நிலை மாறுபாட்டால் பகல் நேரங்களில் மிதமான வெயிலும், இரவு நேரங்களில் மிதமான குளிரும் நிலவியது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இரவில் அதிகமான பனிப் பொழிவும் நிலவுகிறது. கொடைக்கானலில் வருகிற மே மாதம் நடைபெறும் 63-ஆவது மலா்க் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்காக்களில் நடவு செய்யப்பட்ட மலா்ச் செடிகளையும், விதைகளையும் பனிப் பொழிவு தாக்காத வகையில் மாலை நேரங்களில் நிழல் வலை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் மலா் பாத்திகளில் தண்ணீா் தெளித்தல், புற்களை சமப்படுத்துதல், மலா் பாத்திகள் அமைத்தல், பூந்தொட்டிகளில் விதைகள் போடுதல், உரமிடுதல், நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மலா்ச் செடிகளில் களையெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.