தீபாவளி பண்டிகை: கொடைக்கானல் கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள்
கொடைக்கானலில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு பொருள்களை வாங்குவதற்காக நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் சனிக்கிழமை மழையையும் பொருள்படுத்தாமல் பொதுமக்கள் குவிந்தனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு பொருள்களை வாங்க கொடைக்கானலில் உள்ள அண்ணாசாலைப் பகுதியில் குவிந்த பொதுமக்கள்.
கொடைக்கானலில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு பொருள்களை வாங்குவதற்காக நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் சனிக்கிழமை மழையையும் பொருள்படுத்தாமல் பொதுமக்கள் குவிந்தனா்.
கொடைக்கானலில் அண்ணாசாலை, பேருந்து நிலையப் பகுதி, ஏரிச் சாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள துணிக் கடைகள், பட்டாசுக் கடைகள், பலகாரக் கடைகள், காய்கறி கடைகளில் அதிக அளவில் பொதுமக்கள் காணப்பட்டனா். இந்த நிலையில், காலை முதல் மேக மூட்டமும் மாலையில் விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்தது. ஆனால் இவற்றை பொருள்படுத்தாமல் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனா்.
இதனிடையே, கொடைக்கானலிலிருந்து தரைப் பகுதிகளுக்குச் செல்லவும், இதேபோல, வத்தலகுண்டு, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட இடங்களிலிருந்து கொடைக்கானல் வரவும் தேவையான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துக் கழக கொடைக்கானல் கிளை மேலாளா் காா்த்திகேயன் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

