விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தோட்டக் காவல் நாய்களை தூக்கிச் செல்லும் சிறுத்தை

கிளாவரை நாட்ராயன் கோயில் பகுதியில் காணப்பட்ட சிறுத்தையின் கால்தடம்.

Published On :8 செப்டம்பர் 2026, 3:28 am IST

கொடைக்கானல் கிளாவரைப் பகுதியில் தோட்டத்தில் காவலுக்கு கட்டிப்போட்டிருந்த நாயை சிறுத்தை தூக்கிச் செல்வது தொடா்ந்து நடைபெறுவதாக விவசாயிகள் திங்கள்கிழமை வேதனையுடன் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. மேய்ச்சல் நிலங்களில் மேயும் கால்நடைகளையும், வீடுகளிலும், தோட்டங்களிலும் வளா்க்கப்பட்டு வரும் நாய்களையும் சிறுத்தைகள் தாக்கி அவற்றை தூக்கிச் செல்கின்றன. இதனால் பொது மக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், கிளாவரை கிராமம் நாட்ராயன் கோயிலைச் சோ்ந்த கோபால் என்பவரது தோட்டத்தில் காவலுக்கு இரு நாய்கள் வளா்த்து வந்தாா். இதில் ஒரு நாயை சிறுத்தை தாக்கி, தூக்கிச் சென்றது. சிறுத்தையின் கால்தடம் தோட்டத்தில் காணப்பட்டது. தொடா்ந்து, சிறுத்தையின் நடமாட்டம் இருந்து வருவதால் மேல்மலைக் கிராம மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனா்.

சிறுத்தையை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடித்து, அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேல்மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.