பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

கொடைக்கானலில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்!

கொடைக்கானலில் வார விடுமுறை நாளான சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

கொடைக்கானல் லாஸ்காட் சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

Published On :

கொடைக்கானலில் வார விடுமுறை நாளான சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடா் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.

இதனால் சுற்றுலா இடங்களான வெள்ளிநீா் அருவி, பில்லா் ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ் வாக், குணா குகை, மோயா் முனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.

மாலை நேரத்தில் குளுமையான சீதோஷ்ணம் நிலவியது. குளிரையும் பொருள்படுத்தாமல் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தனா். ஏரிச் சாலை, லாஸ்காட் சாலை, மூஞ்சிக்கல், அப்சா்வேட்டரி, உட்வில் சாலை, ஏழுசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனா்.

கொடைக்கானலில் வார இறுதி நாள்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் காவலா்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.