விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசின் கருணைப் பார்வைக்கு காத்திருக்கும் எஸ்.எஸ்.ஏ. தாற்காலிகப் பணியாளர்கள்

மதுரை, ஜூலை 12 : தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்கீழ் பல்வேறு நிலைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பலர் அரசின் பணி நிரந்தர உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:29 am

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை, ஜூலை 12 : தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்கீழ் பல்வேறு நிலைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பலர் அரசின் பணி நிரந்தர உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 ஆரம்பப் பள்ளிகளில் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்கும் நோக்கில் 2002-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 இத் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறையின் மூலம் நவீன முறையில் மாணவ, மாணவியருக்கு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 மாவட்ட அளவில் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகங்களில் பல்வேறு பணியிடங்களில் தாற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 மாநில அளவில் இந்த அலுவலகங்களில் கணினி வகைப்படுத்துநர் 32 பேரும், கணினி விவரப் பதிவாளர்கள் 66 பேரும், பொறியாளர்கள் 197 பேரும், கணக்கு அலுவலர்கள் 110 பேரும், அலுவலக உதவியாளர்கள் 30 பேரும், ஓட்டுநர்கள் 2 பேரும் என மொத்தம் 437 பேர் பணியாற்றி வருகின்றனர்.

 இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்.

 ஆரம்பத்தில் கணினி ஆப்பரேட்டர்களுக்கு ரூ.3 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. பின்னர் இரு ஆண்டுகள் கழித்து ரூ.4,500-மும் அதன் பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 8,500 வரை ஊதியமாகப் பெறுகின்றனர்.

 தொகுப்பூதியத்தை தவிர வேறு இதர படிகள் ஏதும் இவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை.

 இப் பணியாளர்கள் அனைவரும் 31.03.2010 வரை மட்டுமே பணிபுரிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இத் திட்டத்திற்குப் பணி தேவைப்படாத நிலையில் எந்நேரமும் பணி நீக்கப்படலாம் என்ற நிபந்தனையுடன் கூடிய நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளதாக இந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

 மேலும், பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திலிருந்து அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு கோரிக்கை மனு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு, இந்த விஷயத்தில் பள்ளிக் கல்வித் துறை மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவருக்கும் கல்வி இயக்ககம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக இத் தரப்பு ஊழியர்கள் கூறுகின்றனர்.

 இதனால், தங்களுக்கு பணி நிரந்தரம் எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

 ""2003-ம் ஆண்டில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது தாற்காலிக அடிப்படையில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. அதேபோன்று எங்களுக்கும் ஏன் சிறப்புத் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்யக் கூடாது'' என்கிறார் கணினி விவரப் பதிவாளராகப் பணியாற்றும் ஒருவர்.

 இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்கப் பொறியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் மாரியப்பன் கூறியதாவது:

 அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தாற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 436 பேரும் தகுதியின் அடிப்படையிலேயே, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தில் விளக்கேற்றும் வகையில் தமிழக அரசு அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய முன்வர வேண்டும்.

 இதுகுறித்து அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குநருக்கும், பள்ளிக் கல்வித் துறை செயலருக்கும் கோரிக்கை மனு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் அரசு கருணைகாட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.