மதுரையில் திமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக, மதுரையில் வரும் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் நிதியளிப்புக் கூட்டம் மற்றும் ஜூன் 3 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், பெத்தானியாபுரம் பகுதியில் நடைபெற்றது. திமுக மாநகர் மாவட்ட அவைத் தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். இதில், மாநகர் மாவட்டச் செயலர் கோ. தளபதி கட்சிப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினார். மேலும் அவர், மக்களவைத் தேர்தலுக்கான நிதியளிப்புக் கூட்டத்தில், கட்சியினர் நிதியை மாவட்ட அமைப்பிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும், திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து வார்டுகளிலும் திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் விளக்கினார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் திமுக மாவட்டச் செயலர் வ. வேலுச்சாமி, முன்னாள் மேயர் பெ. குழந்தைவேலு மற்றும் கட்சி நிர்வாகிகள் மிசா. பாண்டியன், சிவகுமார், சின்னம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்வீடனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

கேரளத்திலும் கால் பதிக்கும் தவெக! திருச்சூரில் மாவட்ட அளவிலான முதல் கூட்டம்!

ஃபகத் பாசில் புதிய படம் பூஜையுடன் துவங்கியது - புகைப்படங்கள்

கேரள காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைச்சர்கள் பட்டியல்! வி.டி. சதீசன் அறிவிப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
