ஆட்டுக்குளம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம்: கணக்கு கேட்டு பிரச்னை

மேலூர் ஊராட்சி ஒன்றியம், ஆட்டுக்குளம் ஊராட்சியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பிக்க கோரியதில் பிரச்னை ஏற்பட்டது.

Updated On :

மேலூர் ஊராட்சி ஒன்றியம், ஆட்டுக்குளம் ஊராட்சியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பிக்க கோரியதில் பிரச்னை ஏற்பட்டது.

ஆட்டுக்குளம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் சமூகநலத் துறை அலுவலர் ஜெயலட்சுமி தலைமையில், ஊராட்சித் தலைவர் சோணைப்பாண்டி முன்னிலையில் நடைபெற்றது. ஊராட்சித் திட்டப் பணிகள் செலவினம் குறித்து, பொதுமக்களிடம் சோணைப்பாண்டி விவரங்களைத் தெரிவித்தார்.

அப்போது சிலர், ஆட்டுக்குளம் ஊராட்சிப் பள்ளியில் ரூ. 1.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய்க் கிணற்றில் தண்ணீர் இல்லை. பள்ளியில் ரூ. 34 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் சேமிப்புத் திட்டப் பணிகள் அதற்குள் சேதமடைந்துவிட்டன. ஊராட்சி நிதி வீணாக்கப்பட்டுவிட்டது. எனவே, வரவு-செலவு விவரங்களை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தினர்.

இதற்குப் பதிலளித்த ஊராட்சித் தலைவர், ஊராட்சி உதவியாளர் உடல்நலமின்றி விடுப்பில் உள்ளார். கணக்குகளை அலுவலகத்தில் வந்து பார்த்து கொள்ளுங்கள் என்றார். இதற்கு, பொதுமக்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில், கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.