முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

திருமங்கலம் அருகே பைக்கில் கணவருடன் சென்ற பெண்ணின் 6 பவுன் நகை பறிப்பு

திருமங்கலத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

திருமங்கலத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

மதுரை அச்சம்பத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி மனைவி வனஜா (35). வியாழக்கிழமை இவர் தனது தம்பிக்கு பெண் பார்க்க தனது கணவருடன் கள்ளிக்குடி அருகே உள்ள சென்னம்பட்டிக்கு சென்றிருந்தார்.

 அங்கிருந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். கப்பலூர் மின் வாரிய நிறுத்தம் அருகே சென்ற போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் முகத்தை மூடியபடி வந்த மர்ம நபர்கள் இருவர், தம்பதியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதுபோல் வந்துள்ளனர்.

  இதனால் தங்கப்பாண்டி தனது இருசக்கர வாகனத்தின் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் வனஜாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது குறித்து தங்கப்பாண்டி அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.