மதுரையில் முன்விரோத தகராறில் சிற்றுந்து ஓட்டுநரை கத்தியால் குத்திய தந்தை, மகன் மீது, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி ( 26). மதுரையில் தனியார் சிற்றுந்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடன், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் நடத்துனராகப் பணிபுரிந்து வருகிறார். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வெள்ளைச்சாமி சனிக்கிழமை இரவு அண்ணா பேருந்து நிலையம் அருகே சிற்றுந்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த விஜயகுமார், அவரது மகன் அஜீத்குமார் ஆகியோர் பேருந்தை வழிமறித்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், இருவரும் சேர்ந்து வெள்ளைச்சாமியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த வெள்ளைச்சாமி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வெள்ளைச்சாமி அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விஜயகுமார், அஜீத்குமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் மம்தா தா்னா

சென்னை - பக்டோக்ரா இடையே இன்றுமுதல் நேரடி விமான சேவை தொடக்கம்!

84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் இடமாற்றம்

காஸா உதவிப் படகுகள்: இஸ்ரேல் சிறைபிடிப்பு - 175 தன்னாா்வலா்கள் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

