தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

செந்தமிழ்க் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 57-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 311 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:06 am IST

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 57-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 311 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன.
இவ்விழாவுக்கு நான்காம் தமிழ்ச்சங்க செயலர் ச.மாரியப்பமுரளி தலைமை வகித்தார். செந்தமிழ்க் கல்லூரி குழுத் தலைவர் தசரதராமன் முன்னிலை வகித்தார். 
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணபாஸ்கர் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். விழாவில் முதுகலை தமிழில் பட்டம் பெற்ற 38 பேர், இளங்கலை ஆய்வுப்பட்டம் பெற்ற (எம்.ஃபில்) 70 பேர், புலவர் பட்டம் பெற்ற 30 பேர் உள்ளிட்ட 311 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் மு.நல்லகாமன் வாழ்த்துரை வழங்கினார்.  கல்லூரி முதல்வர் சு.விஜயன், ஆட்சிக்குழு உறுப்பினர் அகமுடைநம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  கல்லூரி துணை முதல்வர் கி.வேணுகா வரவேற்றார். உதவிப் பேராசிரியை ம.செல்வத்தரசி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.