சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ், தமுமுகவினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செல்லூர் பகுதியில் மகிளா காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் வீ.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ஷானாவாஸ், ஞானசெளந்தரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெய்ஹிந்த்புரம் வீ.முருகன், சையதுபாபு, துரையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். இதில், நாட்டில் அதிகரித்து வரும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய பாஜக அரசு தவறி வருவதாக கூறி, கோஷங்களை எழுப்பினர்.
தமுமுக சார்பில்: இதே கோரிக்கையை வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும், மதுரை மாவட்ட தமுமுக சார்பில் கோரிப்பாளையம் பள்ளிவாசல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.எச்.சிக்கந்தர் தலைமை வகித்தார். தலைமைக்கழக பேச்சாளர் பழனி பாரூக் கண்டன உரையாற்றினார். இதில், நிர்வாகிகள் கே.அப்பாஸ், வி.எம்.அப்துல் ரபி, பக்ருதீன் அலி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


