செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

கொல்லம் - செங்கோட்டை வழித்தடத்தில் இன்று பயணிகள் ரயில் சேவை ரத்து

பராமரிப்பு பணிகளுக்காக கொல்லம்-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவை வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   

Updated On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

பராமரிப்பு பணிகளுக்காக கொல்லம்-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவை வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   
ரயில் பாதையில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யும் பணி நடைபெறுவதால் கொல்லம் - செங்கோட்டை - கொல்லம் (56336/56335) பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும்,  அதேபோல கொல்லம்  - தாம்பரம் (06028) சிறப்பு ரயில், வியாழக்கிழமை கொல்லம்-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி - மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில் (56821/56822) செப்டம்பர் 1 முதல் மேலும் 3 மாதங்களுக்கு வடமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த ரயில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் வடமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 தற்போது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.