இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மதுரை அருகே நான்கு வழிச்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் நான்கு வழிச்சாலையில் புதன்கிழமை வாகனங்கள் மோதி அடுத்தடுத்து விபத்தில் சிக்கின.

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் நான்கு வழிச்சாலையில் புதன்கிழமை வாகனங்கள் மோதி அடுத்தடுத்து விபத்தில் சிக்கின.
மதுரை அருகே தோப்பூரைச் சேர்ந்தவர் ஒச்சம்மாள். இவர் புதன்கிழமை காலை தோப்பூர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். 
அப்போது கேரளாவிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற காரை கீர்த்தி பென்டின் என்பவர் ஓட்டி வந்துள்ளார். எதிர்பாராத விதமாக மூதாட்டி சாலையை கடப்பதை பார்த்தவுடன், சுதாரித்து வாகனத்தை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். 
அப்போது  பின்னால் வந்த ராஜசேகர் என்பவர் ஓட்டி வந்த கார், கீர்த்திபென்டின் கார் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ராஜசேகர் காயமடைந்தார். அப்பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்தில் சிக்கியதைப் பார்த்த மூதாட்டி ஒச்சம்மாள் மயக்கமடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீஸார் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டனர். மேலும் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.