மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுரைக் கோட்டத்தில் பராமரிப்பு பணி: ரயில்கள் நேரத்தில் மாற்றம்

மதுரைக் கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக பயணிகள் ரயில்களின் நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2018, 12:11 am

DIN

மதுரைக் கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக பயணிகள் ரயில்களின் நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் (வண்டி எண் 56769): ஜூன் 6 முதல் 30 ஆம் தேதி வரை திங்கள் , செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் (56769) ஜூன் 6 முதல் 30 ஆம் தேதி வரை, புதன் மற்றும் சனிக்கிழமைகளில், மதுரை மற்றும் திருநெல்வேலி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில்(56770): ஜூன் 6 முதல் 30 ஆம் தேதி வரை, புதன் மற்றும் சனிக்கிழமைகளில், மதுரையிலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும்.
திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில்(56770): ஜூன் 6 முதல் 30 ஆம் தேதி வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில், திருநெல்வேலி மற்றும் மதுரை இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் (56770): ஜூன் 6 முதல் 30 ஆம் தேதி வரை திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருநெல்வேலி மற்றும் விருதுநகர் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி - ராமேசுவரம் பயணிகள் ரயில்(56829): ஜூன் 11 முதல் 30 ஆம் தேதி வரை பரமக்குடி-ராமேசுவரம் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
ராமேசுவரம் - திருச்சி பயணிகள் ரயில் (56830): ஜூன் 6 முதல் 30 ஆம் தேதி வரை ராமேசுவரம்-பரமக்குடி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில்(56320): ஜூன் 6 முதல் 16 ஆம் தேதி வரை மதுரை, மானாமதுரை மற்றும் விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.