மதுரை தெப்பக்குளம் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை செப்பனிட சம்பந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளாத நிலையில், போக்குவரத்து தலைமைக் காவலர் தனது சொந்த முயற்சியில் சாலையை திங்கள்கிழமை சீரமைத்தார்.
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் ராஜபாண்டியன். இவர், "ஸ்மார்ட் காவலர்கள்' திட்டத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, தலைக்கவச விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியின் பின்பகுதியில் வைகையாற்று சாலையும், பி.டி.ஆர். மேம்பாலமும் சந்திக்கும் இடத்தில் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இதனை அறிந்த போக்குவரத்து தலைமைக் காவலர் ராஜபாண்டியன் சிமென்ட், ஜல்லிக்கற்களை கொண்டு தானே களத்தில் இறங்கி சீரமைத்தார். இதனை கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர் ராஜபாண்டியனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மேலும், இதுகுறித்து தகவலறிந்த மாநகரக் காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம், ராஜபாண்டியனை அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய விருதுகள் பெற்ற அமரன் படக்குழுவுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

தேசிய விருது பெறும் ஜிவி பிரகாஷ்! தொடர்ந்து 2-வது முறை!

இன்றைய செய்திகள் ஜூலை 18 - நேரலை

வெனிசுவேலா நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 5,000-ஐ தாண்டியது
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan


