உணவுப்பதப்படுத்துதல் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருவதாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் சஞ்சோங்கம் ஜதக் ஷிரு கூறினார்.
உணவுப்பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டு விற்பனை முறை குறித்து இந்திய தொழிலக கூட்டமைப்பு(சிஐஐ) சார்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
சிஐஐ மதுரை மண்டல தலைவர் எஸ்.ராஜமோகன் தலைமை வகித்தார். இதில், சஞ்சோங்கம் ஜதக் ஷிரு பேசியதாவது:
உணவுப்பதப்படுத்தும் முறை குறித்து தமிழகத்தில் உள்ள உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் பலருக்கு தெரியாத நிலை உள்ளது. இக்குறையை களையும் வகையில் உணவுப்பதப்படுத்துதல் துறையில் முன்னணியில் உள்ள ஆந்திரம், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆலோசனைபெற்று, தமிழகத்தில் அந்த துறையை மேம்படுத்தும் பணியில் அரசு ஈடுபட உள்ளது.
உணவுப்பதப்படுத்துதல், திட்டமிடல், விற்பனை உள்ளிட்ட 8 முக்கியப் புள்ளிகள் குறித்து நிபுணர்களுடன் அரசு ஆலோசித்து வருகிறது. மேலும் உணவுப்பதப்படுத்துதல் பிரிவின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் நோக்கில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை கவரும் வகையில் அரசு திட்டங்களை வகுத்து வருகிறது என்றார்.இக்கருத்தரங்கில், சிஐஐ மதுரை மண்டல துணைத் தலைவர் கே.நாகராஜ், மதுரை வேளாண் கல்லூரி டீன் எஸ்.சுரேஷ் மற்றும் 75-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

