கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பான வழக்குகளை சிறப்பு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி மற்றும் மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருள்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. ஆனால் ஒரு ஏக்கர் பரப்பளவில் தான் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. கீழடியில் அகழாய்வுப் பணியை தொடரவும், பழங்கால பொருள்களை கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், கீழடி தொடர்பான வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெடிலம் ஆற்று தடுப்பணையில் இறந்து மிதக்கும் மீன்கள்

பாஸ்டேக் பிரச்னை: சுங்கச் சாவடிகளில் தடுத்து நிறுத்தப்படும் அரசுப் பேருந்துகள்

ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

அண்ணாமலைநகா் பேரூராட்சியில் நாய்கள் பிடிப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
