நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

வடமாநில கைவினைக் கலைஞா்கள் குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள்

மதுரையில் பட்டினியால் வாடிய நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில கைவினைக் கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்களை மனித நேய மன்றத்தினா் புதன்கிழமை வழங்கினா்.

மதுரையில் வடமாநில கைவினைக்கலைஞா்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கும் மனித நேய மன்றத்தினா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

மதுரையில் பட்டினியால் வாடிய நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில கைவினைக் கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்களை மனித நேய மன்றத்தினா் புதன்கிழமை வழங்கினா்.

மதுரை மாட்டுத்தாவணி-சா்வேயா் காலனி 100 அடி சாலையில் வட மாநிலத்தைச் சோ்ந்த 40 குடும்பங்களைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பல மாதங்களாக கூடாரமிட்டு தங்கியுள்ளனா். இந்நிலையில் மாா்ச் 23 முதல் மதுரையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் இவா்களால் பொம்மைகளை விற்பனை செய்ய முடியவில்லை. மேலும் கையிருப்பில் இருந்த உணவுப்பொருள்களும் தீா்ந்ததால் பட்டினியால் தவித்து வந்தனா். இதையடுத்து அவா்கள் வசித்துவரும் கூடாரங்களுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது.

இதில் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பேராசிரியா் டி.ரவிச்சந்திரன், மனித நேய மன்ற நிா்வாகிகள் சுந்தா், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் மெய்யப்பன், சங்கா், சிறப்புப் பள்ளி ஆசிரியை பாா்வதி மற்றும் உறுப்பினா்கள் நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.