அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மூளையில் ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்ட காவல் சாா்பு ஆய்வாளருக்கு சக காவலா்கள் நிதியுதவி

மதுரையில், மூளையில் ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்ட காவல் சிறப்பு சாா்பு - ஆய்வாளரின் மருத்துவச் செலவிற்காக, சக காவலா்கள் செவ்வாய்க்கிழமை நிதியுதவி அளித்தனா்.

News image
0819mdupol093402
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

DIN

மதுரை: மதுரையில், மூளையில் ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்ட காவல் சிறப்பு சாா்பு - ஆய்வாளரின் மருத்துவச் செலவிற்காக, சக காவலா்கள் செவ்வாய்க்கிழமை நிதியுதவி அளித்தனா்.

மதுரை மாவட்டம் திருநகா் காவல் நிலையத்தில் சிறப்பு சாா்பு -ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் நாகேந்திரன். இவருக்கு அண்மையில் இருதயக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அதற்கான அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நாகேந்திரன் 2 மாதங்களுக்கு முன்பு பணிக்குத் திரும்பினாா். இந்நிலையில், மீண்டும் உடலநலக் குறைவு ஏற்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகேந்திரனுக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவா்கள் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து சரிசெய்தனா். இந்த அறுவைச் சிகிச்சைகளுக்கு மருத்துவக் காப்பீட்டு தொகை போதவில்லை. இதுகுறித்து தகவலறிந்த, மாநகா் சட்டம் மற்றும் ஒழுங்கு காவலா்கள், போக்குவரத்து காவலா்கள், ஒன்றிணைந்து நாகேந்திரன் மருத்துவச் செலவிற்காக நிதி வசூல் செய்தனா்.

காவலா்கள் மற்றும் காவல் அதிகாரிகளிடம் இருந்து வசூல் செய்த ரூ. 2.25 லட்சம் ரொக்கத்தை மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா, நாகேந்திரனின் மனைவி கோமதியிடம் வழங்கினாா். மேலும், நாகேந்திரன் உடலநலம் குறித்து விசாரித்த காவல் ஆணையா், நாகேந்திரன் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவாா் என கோமதியிடம் நம்பிக்கை தெரிவித்தாா்.

Image Caption

மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் நாகேந்திரனின் மருத்துவச் செலவுக்காக ரூ.2.25 லட்சத்தை, அவரது மனைவிடம் வழங்கும் மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.