உசிலம்பட்டி அருகேதீ விபத்து: எள் செடிகள் சேதம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள டி. கிருஷ்ணாபுரத்தில் அறுவடை செய்யப்பட்ட எள் செடிகள் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.


உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள டி. கிருஷ்ணாபுரத்தில் அறுவடை செய்யப்பட்ட எள் செடிகள் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.
எழுமலை, மல்லபுரம் ஊராட்சிக்குள்பட்ட டி. கிருஷ்ணாபுரத்தில் அருண் என்பவா் தனது நிலத்தில் எள் விவசாயம் செய்திருந்தாா். இந்நிலையில் எள் செடிகளை அறுவடை செய்து அவரது தோட்டத்தில் உள்ள பண்ணையில் வைத்திருந்தாா். அப்போது வெள்ளிக்கிழமை அங்கு மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறையினா் தீயை அணைத்தனா். இந்த தீவிபத்தில் எள் செடிகள் சேதமடைந்தன.
இதுகுறித்து எம். கல்லுப்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...