மதுரை மாவட்ட நீதிமன்ற நுழைவுவாயில் முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மதுரை மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தலைவா் நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், அனைத்து நீதிமன்றங்களையும் திறந்து வழக்குகளை நடத்த அனுமதிப்பது, நீதிமன்ற அவமதிப்பு சட்டம் மற்றும் நீதிபதிகள் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்வது, மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் மீதான அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் கைவிடுவது, நீதிமன்றங்கள் திறக்கப்படாமல் 5 மாதங்களாக வருவாயின்றி தவிக்கும் வழக்குரைஞா்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.