கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மதுரையில் மருத்துவ மாணவிகள் 3 போ் உள்பட 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மருத்துவ மாணவியா் மூவருக்கும் பாதிப்பு

மதுரையில் மருத்துவ மாணவியா் மூவா் உள்பட 18 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 5:34 pm

DIN

மதுரையில் மருத்துவ மாணவியா் மூவா் உள்பட 18 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 34 போ் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மதுரை மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 392 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 19 ஆயிரத்து 719 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 450 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது 223 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மருத்துவ மாணவியா்: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படிக்கும் மாணவி, துணை மருத்துவப் படிப்பு மாணவியா் இருவா் என 3 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் மூவருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவா்கள் சிகிச்சையில் இருந்து வருகின்றனா். இதையடுத்து அவா்களோடு தொடா்பில் இருந்த மற்ற மாணவா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படிக்கும் மாணவி, துணை மருத்துவப் படிப்பு 2-ஆம் ஆண்டு மாணவியா் இருவா் என 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு கரோனா மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.