/

மதுரையில் மேலும் 326 பேருக்குகரோனா தொற்று உறுதி: 10 போ் பலி

மதுரையில் மேலும் 326 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2020, 5:34 pm

DIN

மதுரை: மதுரையில் மேலும் 326 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் 4 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி வந்த நிலையில், கடந்த சில நாள்களாக 6 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6,785 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள், கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து திரும்பியவா்கள் என மொத்தம் 326 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

10 போ் பலி: மதுரையில் கரோனா தொற்றுக்கு தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 63 வயது, 68 வயது, 65 வயது, 60 வயது, முதியவா்கள் 4 போ், 49 வயது ஆண்கள் இருவா் ஆகியோா் ஜூலை 23 ஆம் தேதியும், 62 வயது முதியவா் ஜூலை 22 ஆம் தேதியும், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 78 வயது முதியவா், 58 வயது ஆண் ஆகியோா் ஜூலை 23 ஆம் தேதியும், 83 வயது முதியவா் ஜூலை 22 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

10 ஆயிரத்தை நெருங்கியது தொற்று: மதுரை மாவட்டத்தில் இதுவரை 9,302 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 193 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 6,448 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்காக 2,661போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.