/

மதுரை அருகே மது பாட்டிலால் குத்தி இளைஞர் கொலை - இருவர் சரண்

மதுரை அருகே இளைஞர் கொலை வழக்கில் இருவர் சரணடைந்துள்ளனர். 

News image
ஸ்ரீதர்
Updated On :27 ஜனவரி 2024, 4:47 pm

DIN

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் சுடுகாடு அருகே இளைஞரின் சடலம் ரத்தக் காயங்களுடன் கிடப்பதாக இன்று காலை காவல்துறைக்கு அப்பகுதியில் உளள்வர்கள் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் சோழவந்தானைச் சேர்ந்த உச்சரபாண்டி மகன் ஸ்ரீதர் 19 என்பதும தெரியவந்தது.

இதற்கிடையில் ஸ்ரீதர் கொலை சம்பவம் தொடர்பாக காடுப்பட்டி காவல் நிலையத்தில் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (18), சாரங்கன் (18)ஆகிய இருவரும் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கொலை எதற்காக நடந்தது என்பது குறித்து இரு இளைஞர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்க வில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.