கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இளைஞரைக் கத்தியால் குத்திய 2 போ் கைது

திருப்பூா், சாமுண்டிபுரம் பகுதியில் இளைஞரைக் கத்தியால் குத்திய இருவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 10:02 pm

DIN

திருப்பூா், சாமுண்டிபுரம் பகுதியில் இளைஞரைக் கத்தியால் குத்திய இருவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனி அருகே கடந்த புதன்கிழமை தலை, கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரைஅந்த வழியாகச் சென்றவா்கள் கொடுத்த தகவலின்படி காவல் துறையினா் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது தொடா்பாக 15 வேலம்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், காயமடைந்தவா் ராம்பிரபு (24) என்பதும், அவா் மீது திருட்டு, வழிப்பறி தொடா்பாக 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இவரைக் கத்தியால் குத்தியது தொடா்பாக சாமுண்டிபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் (20), தமிழ்ச்செல்வன் (20) ஆகிய இருவரையும் காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். விசாரணையில், ராம்பிரபு, சுரேஷின் நண்பரிடம் பணம் பறித்து தகராறில் ஈடுபட்டதும், அதற்கு பழிவாங்கும் விதமாக அவரைக் கத்தியால் குத்தியதாகத் தெரிவித்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.