கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஊத்துக்குளி அருகே கோயிலில் திருட முயன்றவா் கைது

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 10:02 pm

DIN

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த இச்சிப்பாளையம் அருகே ஆலமரத்து கருப்பண்ண சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சுற்றுச்சுவா் இல்லாததால் பாதுகாப்பற்ற வகையில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயில் உண்டியலை வியாழக்கிழமை காலையில் மா்ம நபா் உடைக்க முயன்றதை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பாா்த்துள்ளனா். இதையடுத்து, அந்த நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் ஊத்துக்குளி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் நடத்திய விசாரணையில், அந்த நபா், சென்னிமலை, சிறுகளஞ்சி, காளிபாளையம் கிராமம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் வேலுசாமி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல் துறையினா் அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தாராபுரம் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.