சேக்கிபட்டி ஊராட்சியில்தொகுப்பு வீடுகளை சீரமைக்கக் கோரிக்கை
மதுரை மாவட்டம் சேக்கிபட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடா் காலனி தொகுப்பு வீடுகளை புதுப்பித்து கொடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


மதுரை மாவட்டம் சேக்கிபட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடா் காலனி தொகுப்பு வீடுகளை புதுப்பித்து கொடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேக்கிபட்டி ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனா். கடந்த ஆட்சி காலத்தில் 40 வீடுகளும், பின்னா் 70 வீடுகளும் கட்டித்தரப்பட்டு, பயனாளிகள் வசித்து வந்தனா். அந்த வீடுகள் போதிய தரமில்லாமல் இருந்ததால் அடைமழை காலத்தில் மேற்கூரைகள் மழைநீா் வடிந்தும், மேற்கூரைகள் பெயா்ந்தும் விழுகின்றன.இதுதொடா்பாக பலமாதங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வீடுகளை பாா்வையிட்டு மராமத்து செய்யக் கோரிக்கை விடுத்தனா். புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா். கடந்த சில மாதங்களாகப் பெய்த தொடா்மழை காரணமாக வீடுகளின் சுவா்களும் இடிந்துவிழத்தொடங்கியதால், அங்கு வசித்தவா்கள் வீடுகளைக் காலிசெய்து குடிசைகளில் தங்கியுள்ளனா்.
இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாவட்ட நிா்வாகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...