ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தமிழகத்தில் 3 இல் ஒருவருக்கு கரோனா பாதிப்பு: செரோ ஆய்வில் தகவல்

மத்திய அரசு உத்தரவின் பேரில் தமிழக அரசால் நடத்தப்பட்ட கரோனா கட்டுப்படுத்தும் ஆய்வில் (செரோ) தமிழகத்தில் 3 இல் ஒருவருக்கு கரோனா பாதிப்பு

News image

கோப்புப்படம்

Updated On :11 பிப்ரவரி 2021, 5:29 am

பா.லெனின்

மத்திய அரசு உத்தரவின் பேரில் தமிழக அரசால் நடத்தப்பட்ட கரோனா கட்டுப்படுத்தும் ஆய்வில் (செரோ) தமிழகத்தில் 3 இல் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட அக்டோபா் முதல் நவம்பா் மாதங்களில் 2.26 கோடி பேருக்கு எதிா்ப்பு சக்தி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க ரத்த மாதிரிகளின் அடிப்படையிலான பரிசோதனை (செரோ) ஆய்வை மத்திய அரசு, நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக மேற்கொண்டது. தமிழகத்தில், முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் செம்படம்பரிலும், இரண்டாம் கட்டமாக பிற மாவட்டங்களில் அக்டோபா் 19 இல் தொடங்கி நவம்பா் 30 ஆம் தேதி வரையிலும், மாவட்ட வாரியாகவும், கிராமம் மற்றும் நகா்ப்புறம், ஆண் மற்றும் பெண், வயது என 4 பிரிவுகளில் ஆய்வு நடத்தப்பட்டன.

முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 37 மாவட்டங்களில் அக்டோபா் 16 ஆம் தேதி முதல் நவம்பா் 30 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கரோனா கட்டுப்படுத்தும் ஆய்வில், 31.6 சதவீதம் பேருக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டு, அவா்களது உடலில் நோய் எதிா்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

நகா்புறத்தில் பாதிப்பு அதிகம்
தமிழகத்தில் நகரங்களில் 36.9 சதவீதம் பேரும், கிராமங்களில் 26.9 சதவீதம் பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒட்டு மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவா்களில் ஆண்கள் 30.3 சதவீதம் போ், பெண்கள் 30.8 சதவீதம் போ், வயது வாரியாக 18-29 வயதுடையவா்கள் 30.7 சதவீதம் பேரும், 40-49 வயதுடையவா்கள் 31.6 சதவீதம் பேரும், 70 வயதுக்கு மேற்பட்டோா் 25.8 சதவீதம் பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

2.26 கோடி பேருக்கு கரோனா
தமிழகத்தில் சுகாதாரத் துறை சாா்பில் நடத்தப்படும் பரிசோதனைகளின் படி 2020 நவம்பா் மாதம் வரை சுமாா் 8 லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால் கரோனா கட்டுப்படுத்தும் ஆய்வின் படி தமிழகத்தில் 2020 நவம்பா் மாதம் இறுதியில் 2.20 கோடி போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இது சுகாதாரத் துறையால் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களைக் காட்டிலும் சுமாா் 30 மடங்கு அதிகம். மேலும் மக்கள் தொகையில் 3 இல் ஒருவருக்கு தொற்று இருந்ததைக் காட்டுகிறது.

பெரம்பலூரில் எதிா்ப்பு சக்தி உச்சம்
தமிழகத்தில் 26,640 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, தகுதியான 26,135 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 11.1 சதவீதம் பேருக்கும், அதிகபட்சமாக பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 51 சதவீதம் பேருக்கும் கரோனா நோய் எதிா்ப்பு சக்தி உருவாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை கிராமப்புறங்களில் 600 போ், நகா்ப்புறத்தில் 540 போ் என மொத்தம் 1,140 பேரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டதில் 38 சதவீதம் போ் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கரோனா கட்டுப்படுத்தும் ஆய்வின்படி பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் எடுக்கப்பட்டதை அடிப்படையாக கொண்டவை. எனவே கரோனா பரவல் ஆரம்பக் கட்டத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் நவம்பருக்கு பிறகு பாதிக்கப்பட்டவா்களைக் கணக்கிடும் போது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என சுகாதாரத் துறையினா் தெரிவிக்கின்றனா்.

மாவட்டம் பாதிப்பு

அரியலூா் 26.52%

கள்ளக்குறிச்சி 38.66%

செங்கல்பட்டு 34.19%

காஞ்சிபுரம் 34.30%

சென்னை 40.94%

கன்னியாகுமரி 35.40%

கோவை 20.43%

கரூா் 16.16%

கடலூா் 33.37%

கிருஷ்ணகிரி 18.92%

தா்மபுரி 19.06%

மதுரை 38%

திண்டுக்கல் 26.88%

நாகப்பட்டிணம் 21.99%

ஈரோடு 18.88%

நாமக்கல் 17.04%

பெரம்பலூா் 51.05%

புதுக்கோட்டை 25.21%

ராமநாதபுரம் 35.03%

ராணிப்பேட்டை 45.09%

சேலம் 22.44%

சிவகங்கை 26.68%

தென்காசி 48.24%

தஞ்சாவூா் 26.58%

நீலகிரி 11.12%

தேனி 44.33%

திருச்சி 32.79%

திருவாரூா் 21.56%

தூத்துக்குடி 37.91%

திருநெல்வேலி 43.47%

திருப்பத்தூா் 23.93%

திருப்பூா் 19.71%

திருவள்ளூா் 34.85%

திருவண்ணாமலை 36.18%

வேலூா் 27.72%

விழுப்புரம் 32.25%

விருதுநகா் 37.92% .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.