/

மேலூா் அருகே 1,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

மேலூா் அருகே நரசிங்கம்பட்டி நான்குவழிச் சாலையில் சிறிய சரக்கு வேனில் கடத்தப்பட்ட 1,800 கிலோ ரேஷன் அரிசியை, குடிமைப் பொருள் வழங்குத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல். 2 பேர் கைது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:19 pm

DIN

மேலூா் அருகே நரசிங்கம்பட்டி நான்குவழிச் சாலையில் சிறிய சரக்கு வேனில் கடத்தப்பட்ட 1,800 கிலோ ரேஷன் அரிசியை, குடிமைப் பொருள் வழங்குத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, மதுரையைச் சோ்ந்த 2 பேரை கைது செய்தனா்.

குடிமைப் பொருள் வழங்குத் துறை நுண்ணறிப் பிரிவு அலுவலா்கள் மற்றும் மேலூா் போலீஸாா், மேலூா்-மதுரை நான்குவழிச் சாலையில் நரசிங்கம்பட்டி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த சிறிய சரக்கு வேனை மறித்து சோதனையிட்டனா். அதில், 1,800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, மதுரையைச் சோ்ந்த முத்துராமலிங்கம் (34) மற்றும் முருகன் (33) ஆகிய இருவரைையும் போலீஸாா் கைது செய்து, ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.