ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

வயலில் இறங்கி குறைகளைக் கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரையில் கிராம சபைக் கூட்டத்திற்கு செல்லும் வழியில் கே.நாட்டப்பட்டி கிராமத்தில் வயலில் இறங்கி விவசாயப் பெண்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார்.

News image
விவசாயப் பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :28 ஜனவரி 2024, 4:17 am

DIN

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் கே.நாட்டப்பட்டி கிராமத்தில் வயலில் இறங்கி நாற்று நடவு செய்து கொண்டிருந்த விவசாயப் பெண்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அரசு சுற்றுப்பயணமாக மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி அரசு மாணவர் விடுதியில் மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இந்நிலையில் மதுரை பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்திற்கு செல்லும் வழியில் கே.நாட்டப்பட்டி கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயப் பெண்களைக் கண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தி வயலில் இறங்கி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக குறைகளைக் கேட்டதைத் தொடர்ந்து ஆச்சரியமடைந்த விவசாயப் பெண்கள் தங்களது குறைகளை அவர்களிடம் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.