2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

மதுரையிலிருந்து திருப்பதிக்கு நவ.19-ல் விமான சேவை தொடக்கம்

மதுரை விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் திருப்பதிக்கு விமானசேவை வருகின்ற நவம்பர் 19ம் தேதியில் இருந்து தொடங்குகிறது.

News image
ஆப்கன் உடனான விமான சேவை: பாகிஸ்தான் அறிவிப்பு
Updated On :13 அக்டோபர் 2021, 10:37 am

DIN

மதுரை விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் திருப்பதிக்கு விமானசேவை வருகின்ற நவம்பர் 19ம் தேதியில் இருந்து தொடங்குகிறது.

மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத், புதுதில்லி என நாளொன்றுக்கு 20 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் மதுரையில் இருந்து துபாய்க்கு வாரத்தில் மூன்று நாட்கள் வெளிநாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை வேண்டும் என பக்தர்கள் நீண்ட காலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனடிப்படையில் தனியார் விமான நிறுவனம் வருகின்ற நவம்பர் மாதம் 19 ஆம் தேதியிலிருந்து மதுரையிலிரந்து தினமும் திருப்பதிக்கு விமான சேவை செய்ய உள்ளது.

அதன்படி மதுரையில் இருந்து இந்த விமானம் தினமும் மதியம் 3 மணிக்கு புறப்பாடாகி மாலை 4.20 மணிக்கு திருப்பதி சென்றடையும். மீண்டும் அதே விமானம் மாலை 4.40 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு 6.04 மணிக்கு மதுரை வந்தடையும்.

அதற்கான முன்பதிவு சேவையை தனியார் டிராவல்ஸ் நிறுவனங்கள் தற்போது தொடங்கியுள்ளன. மதுரையில் இருந்து திருப்பதிக்கு ரூபாய் 3,500 கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை என்பது பெருமாள் பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.