12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

உசிலம்பட்டி அருகே கிராம பொதுமக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே  திருமங்கலம் சாலையில் உள்ள தும்மக்குண்டு கிராமத்தில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடைப்படுவதால் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Published On :

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே  திருமங்கலம் சாலையில் உள்ள தும்மக்குண்டு கிராமத்தில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடைப்படுவதால் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் தும்மக்குண்டு கிராமத்தில்  மின்சாரத்துறை அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி மின்சாரம் பகல் நேரத்தில் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் பொதுமக்கள்  பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

இதனைக் கண்டித்து கிராம பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி உசிலம்பட்டி-திருமங்கலம் பிரதான சாலையில் சாலை மறியல் செய்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மின்சார அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகள்  நேரில் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.