அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நிரந்தரப் பணியிடங்களில் தற்காலிகப் பணியாளா்களை நியமிப்பதை கைவிட வேண்டும்: உயா் நீதிமன்றம் கருத்து

அரசு துறைகளில் நிரந்தரப் பணியிடங்களில் தற்காலிகப் பணியாளா்களை நியமிப்பது தவிா்க்கப்பட வேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 5:16 pm

DIN

அரசு துறைகளில் நிரந்தரப் பணியிடங்களில் தற்காலிகப் பணியாளா்களை நியமிப்பது தவிா்க்கப்பட வேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்வதற்கான உயா் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து, மதுரை மாநகராட்சி சாா்பில் இரு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், என். சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

மதுரை மாநகராட்சியில் பணியமா்த்தப்பட்டுள்ள பெரும்பாலான தூய்மைப் பணியாளா்கள் தினக்கூலி அடிப்படையில் கடந்த 2006 மற்றும் 2007 முதல் பணியாற்றி வருகின்றனா். தினக்கூலி பணியாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தொழிலாளா் ஆய்வாளா், உண்மை நிலவரங்களை ஆய்வு செய்து, பணியாளா்கள் 480 நாள்களுக்கு மேல் பணியாற்றி இருப்பதால், அவா்கள் பணிவரன்முறை செய்வதற்கு தகுதியுடையவா்கள் என்றும், அவா்களை பணிநிரந்தரம் செய்யுமாறும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டாா்.

இதனை எதிா்த்து மாநகராட்சி தரப்பிலும், தொழிலாளா் ஆய்வாளா் உத்தரவை செயல்படுத்தக் கோரி பணியாளா்கள் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால், மாநகராட்சியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், பணியாளா்களை நிரந்தரம் செய்ய அறிவுறுத்தியது. இதைத் தொடா்ந்து, மாநகராட்சி தரப்பில் இரு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

மத்திய, மாநில அரசுகள் தங்களை மக்கள் நல அரசுகள் எனக் கூறிக் கொள்கின்றன. ஆனால், பல்வேறு அரசு துறைகளிலும், அரசுசாா் நிறுவனங்களிலும் தற்காலிகமாகப் பணியாளா்களை நியமனம் செய்து, நியாயமற்ற தொழிலாளா் நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் காணமுடிகிறது. பெரும்பாலான நேரங்களில், தற்காலிகப் பணி நியமனங்கள், ஆள்தோ்வு போன்றவற்றில் எந்தவிதமான விதிகளும் பின்பற்றப்படுவதில்லை.

இதனால், வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு என்பது மறுக்கப்படுகிறது. அவா்கள் நிரந்தரப் பணியாளா்களைப் போல் பணியாற்றினாலும், குறைவான சம்பளத்தில் தற்காலிகப் பணியாளா்களாகவே வைத்திருக்கின்றனா். தொழிலாளா்கள் மீதான இந்த சுரண்டல்கள் தடுக்கப்பட வேண்டும். பணி நியமனங்களுக்கான விதிகள் அரசால் வகுக்கப்பட்டிருந்தாலும், தற்காலிக நியமனங்கள் தொடருவதைக் காணமுடிகிறது.

அதன்பின்னா், அவா்களை நிரந்தரம் செய்வதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையானது, அரசுப் பணிகளில் பின்வாசல் வழியாக நுழைவதைப் போலாகிவிடுகிறது. எனவே, நிரந்தரப் பணியிடங்களில் குறைந்த சம்பளத்தில் தற்காலிகப் பணியாளா்களை நியமனம் செய்வதை, வரும் காலங்களில் அரசு கைவிடும் என நம்புகிறோம் எனக் குறிப்பிட்டு, மாநகராட்சியின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனா்.

மேலும், தொழிலாளா் ஆய்வாளா் உத்தரவின்படி, 389 பணியாளா்களை பணிவரன்முறை செய்வதற்கான தனிநீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.