அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நடிகா் தனுஷ் மீதான வழக்கு: ரத்து செய்ததை எதிா்த்து மேலூா் தம்பதி உயா்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

திரைப்பட நடிகா் தனுஷ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேலூா் தம்பதி தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 5:16 pm

DIN

திரைப்பட நடிகா் தனுஷ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேலூா் தம்பதி தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகா் தனுஷ் தங்களது மகன் என்றும், வயது முதிா்வு காரணமாக தங்களுக்கு பராமரிப்புத் தொகை வழங்க தனுஷுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியா், மேலூா் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். ஆனால், அவா்கள் தெரிவிக்கும் தகவல்களில் உண்மையில்லை எனக் கூறி, வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனுஷ் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது இரு தரப்பினரும் தனுஷின் பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை தாக்கல் செய்தனா். விசாரணைக்குப் பிறகு, தனுஷ் மீது மேலூா் நீதிமனறத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த தம்பதி மதுரை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் (எண் 6) மற்றொரு வழக்குத் தொடா்ந்தனா். அதில், தனுஷ் தரப்பில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியானவை. ஆகவே, தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனா். இந்த மனு 2017-இல் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், அந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கதிரேசன் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்: நடிகா் தனுஷ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகா் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய மதுரை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு இதுவரை வழங்கப்படவில்லை. அதற்குள் எனது மனுவை நடுவா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஏற்புடையதல்ல. ஆகவே, அந்த உத்தரவை ரத்து செய்து, எனது மனுவை முறையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.