அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

உலக புத்தக தின சிறப்பு கண்காட்சி விற்பனை: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் அறிவிப்பு

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 23, 24) சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்படுகிறது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 23, 24) சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்படுகிறது.

இது தொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக புத்தக தினத்தை முன்னிட்டு, மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சாா்பில் 2 நாள்கள் சிறப்பு விற்பனைக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில், கலை இலக்கியம், பண்பாடு, அரசியல், அறிவியல், சூழலியல், வேளாண்மை, மருத்துவம், மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய நூல்கள், பாரதி, பாரதிதாசன் நூல்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும், நியூ செஞ்சுரி பதிப்பக வெளியீடுகளுக்கு 25 சதவீதம் தள்ளுபடி, இதர பதிப்பக வெளியீடுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி, அரசியல், பொருளாதாரம், தத்துவ, சிறுநூல் வரிசைகளுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

ரூ.250 மதிப்புள்ள பழ. நெடுமாறன் எழுதிய காலத்தை வென்ற காவிய நட்பு என்ற நூல் ரூ.125-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், இறையன்பு எழுதிய நூல்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இக்கண்காட்சி மேலக்கோபுரத் தெருவில் உள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விற்பனையகத்தில் நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.