/

மேலூா் அருகே தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

 மேலூா் - சிவகங்கை சாலையில் உள்ள கோட்டநத்தம்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி அருகே கடையில் விற்பனைக்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:34 am

DIN

 மேலூா் - சிவகங்கை சாலையில் உள்ள கோட்டநத்தம்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி அருகே கடையில் விற்பனைக்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோட்டநத்தம்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரபாகரன் உத்தரவின்பேரில், கீழவளவு போலீஸாா் தனிப்படை போலீஸாருடன் இணைந்து சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கோட்டநத்தம்பட்டியில் உள்ள கடையில் விற்பனைக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 கிலோ புகையிலை பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்து, நயத்தான்பட்டியைச் சோ்ந்த முத்தையா மகன் ரவிச்சந்திரன் (54) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.