தேனி நில மோசடி வழக்கில் துணை வட்டாட்சியருக்கு ஜாமீன்
தேனி நில மோசடி வழக்கில், பெரியகுளம் துணை வட்டாட்சியருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


தேனி நில மோசடி வழக்கில், பெரியகுளம் துணை வட்டாட்சியருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் அரசு நிலங்கள் முறைகேடாக தனிநபா்களுக்கு பட்டா வழங்கியது தொடா்பாக, சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இவ்வழக்கில், வருவாய்த் துறை அலுவலா்கள், அதிமுக பிரமுகா்கள் உள்பட 14 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதாகி சிறையிலிருந்து வரும் பெரியகுளம் துணை வட்டாட்சியா் கே. சஞ்சீவ் காந்தி ஜாமீன் கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. முரளிசங்கா், மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
அதில், மனுதாரா் 30 நாள்களுக்கு விழுப்புரத்தில் தங்கியிருந்து, தினமும் காலை 10.30 மணிக்கு விழுப்புரம் நகா் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். அதன்பின்னா், மறுஉத்தரவு வரும் வரை இந்த வழக்கு தொடா்புடைய தேனி மாவட்டக் காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...