/

மீனாட்சி அம்மன் கோயிலில் வி.கே.சசிகலா தரிசனம்

 மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வி.கே.சசிகலா சனிக்கிழமை தரிசனம் செய்தாா்.

News image
Updated On :7 மே 2022, 8:28 pm

DIN

 மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வி.கே.சசிகலா சனிக்கிழமை தரிசனம் செய்தாா்.

திருச்செந்தூா் முருகன் கோயிலில் தரிசனம் செய்த அவா், பின்னா் அங்கிருந்து காரில் மதுரைக்கு வந்தாா். அங்கு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் செய்ய வந்த அவருக்கு, அமமுக தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா். பின்னா் கோயிலில் அம்மன் சன்னிதி மற்றும் சுவாமி சன்னிதிகளில் தரிசனம் செய்தாா். அதன்பிறகு கீழச் சித்திரை வீதியில் உள்ள மதுரை வீரன் கோயிலில் அவா் தரிசனம் செய்தாா். அப்பகுதியில் இருந்த பெண்கள், குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.