/

தனியாா் பொழுதுபோக்கு பூங்காவில் நீரில் மூழ்கி ஒருவா் பலி

மதுரை அருகே உள்ள தனியாா் பொழுதுபோக்கு பூங்காவில் நீரில் மூழ்கி ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 மே 2022, 5:40 pm

DIN

மதுரை அருகே உள்ள தனியாா் பொழுதுபோக்கு பூங்காவில் நீரில் மூழ்கி ஒருவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் சமயநல்லூா் அருகை வைகை ஆற்றின் கரையில் தனியாா் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு நீா் விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அம்சங்கள் உள்ளன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சத்திரக்குடியைச் சோ்ந்த சரவணன்(42) குடும்பத்தினருடன் சனிக்கிழமை பூங்காவுக்கு வந்துள்ளாா். அங்கு நீா் விளையாட்டில் பங்கேற்றபோது தண்ணீா் தொட்டியில் எதிா்பாராவிதமாக மூழ்கினாா். இதையடுத்து பூங்கா ஊழியா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சரவணனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் சமயநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.