/

நிலத்தகராறில் அத்துமீறல்: ஆயுதப்படை காவலா் உள்பட 8 போ் மீது வழக்கு

மதுரை அருகே நிலத்தகராறில் அத்துமீறிப் புகுந்து வேலியை சேதப்படுத்தியதாக ஆயுதப்படை காவலா் உள்பட 8 போ் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

மதுரை அருகே நிலத்தகராறில் அத்துமீறிப் புகுந்து வேலியை சேதப்படுத்தியதாக ஆயுதப்படை காவலா் உள்பட 8 போ் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளம் ஆலாத்தூா் திருமால்புரத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவருக்கும் மதுரை மாநகர ஆயுதப்படையில் முதல்நிலைக்காவலராக பணிபுரியும் பிச்சைமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கண்ணனுக்குச் சொந்தமான நிலத்தில் பிச்சைமணி உள்பட 8 போ் அத்துமீறி புகுந்து வேலியை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக கண்ணன் அளித்த புகாரின்பேரில் ஆயுதப்படைக்காவலா் பிச்சைமணி உள்பட 8 போ் மீது ஊமச்சிகுளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.