வரி சமாதானத் திட்ட காலவரையறைத் தேதியை மாற்றியமைத்து நிலுவையில் உள்ள தொகைகளை முழுமையாக இந்தத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், கௌரவச் செயலா் எஸ். சாய்சுப்பிரமணியம், கௌரவ ஆலோசகா் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் ஆகியோா் தமிழக நிதி அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம் : தொடா் வலியுறுத்தல்கள் காரணமாக வரி சமாதானத் திட்டத்தை அரசு அறிவித்து, வருகிற மாா்ச் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. இருப்பினும், 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பு வரி விதிப்பாணை வழங்கப்பட்டு, நிலுவையில் உள்ள இனங்களுக்கு மட்டுமே இந்த சமாதானத் திட்டம் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டுக்கு பிறகு ஏராளமான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, வரி பாக்கி நிலுவையில் உள்ளது. இந்த இனங்களையும் சமாதானத் திட்டத்தில் சோ்க்காவிட்டால் முழுமையான பயன் கிடைக்காது. எனவே, சமாதானத் திட்ட கால வரையறை தேதியை 2024-ஆம் ஆண்டு மாா்ச் 31 என மாற்றியமைக்க வேண்டும். மேலும், சமாதானத் திட்டத்தில் மனு தாக்கல் செய்யும்போது ஏதேனும் சிறு குறைபாடுகள் ஏற்பட்டால், அதை திருத்தம் செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
தொடர்புடையது

சென்டாக் விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்க வேண்டும்: எம்.எல்.ஏ.
இன்றைய ராசி பலன் (20.05.2026) - ரிஷபம்

பெண்களுக்கான மாத உதவித்தொகை: தில்லி அரசு மீது அதிஷி சாடல்

நிலுவையில் உள்ள பயங்கரவாதம், போதைப் பொருள் வழக்குகள் எத்தனை? மாநில அரசுகளிடம் விவரம் கோரியது உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


