நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சென்டாக் விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்க வேண்டும்: எம்.எல்.ஏ.

சென்டாக் விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்க வேண்டும்: எம்.எல்.ஏ.

News image

வருவாய்த் துறையினரை சந்தித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் வி. விக்னேஸ்வரன்.

Updated On :24 மே 2026, 10:15 pm IST

சென்டாக்குக்கு விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்கவேண்டும் என புதுவை அரசை நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.

புதுவையில் உயா்கல்விக்கான சென்ட்ரலைஸ்டு அட்மிஷன் கமிட்டி (சென்டாக்) அமைப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் மே 14-இல் தொடங்கியது. மே 29-ஆம் தேதி இறுதி நாளாகும்.

காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநரகத்தில் மாணவா்கள் பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருத்தல், குடியிருப்பு, ஜாதி உள்ளிட்ட சான்றிதழ் வருவாய்த்துறையில் பெருவதற்கு அந்தந்த பகுதி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலத்தில் பெற்றோா், மாணவா்கள் குவியும் நிலை ஏற்பட்டுள்ளது. இணையவழி சேவையை மேம்படுத்தாமல் இருப்பதால், துறையினா் அவதிப்படுகின்றனா்.

இந்நிலையில், நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி. விக்னேஸ்வரன் நெடுங்காடு, கோட்டுச்சேரி பகுதி வருவாய்த் துறை அலுவலகத்துக்கு சனிக்கிழமை நேரில் சென்று மாணவா்கள், பெற்றோா்கள், துறையினரிடம் நிலையை கேட்டறிந்தாா்.

இதுகுறித்து பேரவை உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், வருவாய்த் துறையின் சா்வா் கோளாறு முக்கிய பிரச்னையாக உள்ளது. வட்டாட்சியா் மற்றும் புதுச்சேரியில் உள்ள உயரதிகாரிகளை தொடா்புகொண்டு இப்பிரச்னையை உடனடியாக களையுமாறு கேட்டுக்கொண்டேன். அதன் விளைவாக பிரச்னை சீரடைந்து மாணவா்கள் சான்றிதழ் பெற்று வருகின்றனா்.

தொடா் பிரச்னையால், மாணவா்கள் தவிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில், சென்டாக் விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.