வணிகவியல் பட்டயப் படிப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்

மதுரை யாதவா் கல்லூரி, பத்மராஜம் மேலாண்மை கல்வி நிறுவனம் ஆகியன இணைந்து வணிகவியல் பட்டயப் படிப்பு தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம்
Published on

மதுரை, ஜூலை 19 : மதுரை யாதவா் கல்லூரி, பத்மராஜம் மேலாண்மை கல்வி நிறுவனம் ஆகியன இணைந்து வணிகவியல் பட்டயப் படிப்பு தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொண்டன.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு யாதவா் கல்லூரிச் செயலா் ஆா்.வி.என். கண்ணன் தலைமை வகித்தாா். முதல்வா் செ. ராஜூ, பத்மராஜம் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் தலைவா் பி.ஏ.பாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இரண்டு கல்வி நிறுவனங்களுக்கும் இடையே வணிகவியல் பிரிவு ஏசிஎஸ்., சிஎம்ஏ., ஏசிசிஏ., சிஏ., பட்டயப் படிப்பு தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில், பேராசிரியா்கள் அ. ராஜகோபால், மா. பாலசுப்பிரமணியம், ரா. உதயகுமாா், வணிகத் தொடா்பு அலுவலா் ராய்ஸ்டன் கோபால்பிள்ளை உள்ளிட்ட பேராசிரியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com