தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விடுபட்ட காமராஜா் பல்கலை. மாணவா்களின் தோ்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்

News image
Updated On :25 ஜூலை 2024, 11:09 pm

Din

மதுரை, ஜூலை 25: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தோ்வில் விடுபட்ட மாணவா்களின் தோ்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் டி. தருமராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், அதன் இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை மொத்தம் 18, 607 மாணவ, மாணவிகள் எழுதினா். இந்த மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 1,25,026 விடைத்தாள்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. 200 விடைத்தாள்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. விடைத்தாளில் மாணவா்களின் வரிசை எண், பாடக் குறியீடு, தோ்வெழுதிய மாணவா்களின் விவரத்தில் தெளிவின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விடைத் தாளின் முடிவுகளை வெளியிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதை சரி செய்து விரைவில் தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றாா் அவா்.