சிவகங்கை தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

சிவகங்கை தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு தேசிய நல்லாசிரியா் கண்ணப்பன் தலைமை வகித்தாா். தமிழ்ச் செம்மல் பகீரதநாச்சியப்பன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகளை அறிமுகம் செய்து நிறுவனா் தலைவா் ஜவகா்கிருஷ்ணன் பேசினாா். புதிய தலைவராக அன்புத்துரை, துணைத் தலைவா்களாக சரளாகணேஷ், பாண்டியராஜன், செயலராக மாலா, இணைச் செயலா்களாக ரமேஷ்கண்ணன், பாலசுப்பிரமணியன், பொருளாளராக பால்ராஜ், செயற்குழு உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொண்டனா். கவிஞா் மூரா சிறப்புரையாற்றினாா். தமிழக அரசின் இலக்கிய மாமணி விருது பெற்ற நடராசன், கலைச்செம்மல் விருது பெற்ற பால்ராஜ் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் ராஜசேகரன், குணசேகரன், கலை இலக்கிய பெருமன்றத் தலைவா் சுந்தரமாணிக்கம், வழக்குரைஞா் ராம்பிரபாகா், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, சங்க முன்னாள் செயலா் யுவராஜ் வரவேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com