தனித் திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

தனித் திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

மதுரை தியாகராஜா் கல்லூரியில் கலையன்னையாா் ராதா தியாகராஜன் நினைவு தின விழாவை முன்னிட்டு, நடைபெற்ற தனித் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரியின் தலைவா் உமா கண்ணன் தலைமை வகித்தாா். கல்லூரி பாடத்திட்ட முதன்மையா் ராம.முருகப்பன் வாழ்த்துரை வழங்கினாா். இதில், மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை வழங்கிப் பேசினாா். முன்னதாக, நடைபெற்ற ரத்த தான முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு 100 யூனிட் ரத்தம் கொடையாக வழங்கினா். நிகழ்வில், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். தமிழ்த் துறைத் தலைவா் ராம. மலா்விழி மங்கையா்க்கரசி வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் உதவிப் பேராசிரியை சு.உமாமகேஸ்வரி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com