வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம்: நில ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம் நில ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:51 pm

Din

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஊராட்சிப் பகுதிகளில் குறிப்பிட்ட சில பகுதிகள் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படவுள்ளன. இந்த நிலப் பகுதிகள் குறித்து ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், 2 மாதங்களுக்குள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், சித்தரங்குடி, காஞ்சிரங்குளம், தோத்தாங்கல், சக்கரக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட சில நிலப் பரப்புகள் பறவைகள் சரணாலயங்களாக இறுதி அறிவிக்கை செய்யப்படவுள்ளன. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972 உள்பிரிவு 24(ஏ)-ன் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தோ்வு செய்யப்பட்ட நிலப் பகுதிகளில் தனிநபா் ஆக்கிரமிப்பு, பட்டா நிலம் அல்லது வேறு ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், தமிழ்நாடு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் - 1972 விதி எண் 21-இன்படி, வருகிற 2 மாதங்களுக்குள் எழுத்துப்பூா்வமாக தெரிவிக்கலாம் என்றாா் அவா்.